வலு தரும் நிலக்கடலைப் பால்

வலு தரும் நிலக்கடலைப் பால்
Updated on
1 min read

கொழுப்பு அதிகம் என்று சிலரால் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்ட தாலேயே நிலக்கடலையிலிருந்து பெறப்படும் எண்ணெய்யைப் பலரும் பயன்படுத்துவதில்லை. அப்படித்தான் நிலக்கடலையின் பயன்பாட்டையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டனர். நாம் வசிக்கும் பகுதியைச் சுற்றி ஐந்து கி.மீ. நிலப்பரப்புக்குள் விளைகிற,  கலப்பினம் செய்யப்படாத உணவுப் பொருட்களைச் சாப்பிடுவது உடல் நலத்துக்கு நல்லது என்பது வேளாண் வல்லுநர்களின் கருத்து. “நாம் அதை நிலக்கடலையிலிருந்து ஆரம்பிக்கலாம்” என்று சொல்லும் திருத்துறைப்பூண்டி வாசகி பார்வதி கோவிந்தராஜன், நிலக்கடலையில் செய்யக்கூடிய சில உணவு வகைகளின் செய்முறையைப் பகிர்ந்துகொள்கிறார்.

நிலக்கடலைப் பால்

என்னென்ன தேவை?

வேகவைத்த நிலக்கடலை – ஒரு கப்

தேங்காய்ப் பால் – அரை கப்

நாட்டுச் சர்க்கரை – ருசிக்கேற்ப

ஏலக்காய்ப் பொடி – அரை டீஸ்பூன்

சுக்குப் பொடி – கால் டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

வேகவைத்த நிலக்கடலையில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். அதைக் குறைந்த தீயில் ஏழு நிமிடங்கள் காய்ச்சுங்கள். பிறகு தேங்காய்ப் பால், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி ஆகியவற்றைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு ஆறியதும் பரிமாறுங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in