

என்னென்ன தேவை?
அரிசி மாவு – ஒரு கப்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவைக்கு
எள் – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 3
தேங்காய்த் துருவல் – கால் கப்
தண்ணீர் – ஒன்றரை கப்
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதனுடன் உப்பு, எண்ணெய் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் அடுப்பை அணைத்துவிட்டு உடனே அரிசி மாவைக் கொட்டி, கட்டியில்லாமல் கிளறி மூடிவைத்துவிடுங்கள். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் மிளகாய் வற்றல், உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, எள், தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள்.
ஆறியதும் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். இப்போது மாவை எடுத்துச் சிறு உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, வேகவைத்த உருண்டைகளைப் போட்டுக் கிளறுங்கள். அரைத்து வைத்துள்ள கலவையைத் தூவி கிளறி இறக்குங்கள்.