

என்னென்ன தேவை?
ராகி – அரை கிலோ
பொட்டுக் கடலை, கோதுமை, சோயா பீனஸ் – அரை கிலோ
நாட்டுச் சர்க்கரை – ஒரு கிலோ
நெய் – 150 கிராம்
ஏலக்காய்த் தூள் – 1 டீஸ்பூன்
முந்திரி, பாதாம் – தலா 50 கிராம்
வேர்க்கடலை – 100 கிராம்
எப்படிச் செய்வது?
தானியங்களைத் தனித்தனியாக வறுத்து, மிஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள். நாட்டுச் சர்க்கரையைக் கட்டிகள் இல்லாமல் மிக்ஸியில் போட்டுப் பொடித்துக்கொள்ளுங்கள். வாணலியில் நெய் விட்டுச் சூடானதும் சத்து மாவை மிதமான தீயில் வறுத்துக்கொள்ளுங்கள். முந்திரி, பாதாம், வேர்க்கடலை ஆகியவற்றையும் நெய்யில் வறுத்துக்கொள்ளுங்கள். வறுத்த மாவைப் பருப்பு வகைகளோடு சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். காய்ச்சிய பாலைத் தொட்டுக்கொண்டு உருண்டைகளாகப் பிடியுங்கள்.