

காஷ்மீரி தேநீர்
என்னென்ன தேவை?
பால் – 2 கப்
சர்க்கரை – 6 டேபிள் ஸ்பூன்
காஷ்மீர் டீத்தூள் – 4 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 2
அன்னாசிப்பூ – 1
பட்டை – சிறிய துண்டு
உப்பு – கால் டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்
ஐஸ் கட்டிகள் – 4
எப்படிச் செய்வது?
பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிவந்ததும் அதில் காஷ்மீரி டீத்தூளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். அதனுடன் ஏலக்காய், அன்னாச்சிப்பூ, பட்டை ஆகியவற்றை நசுக்கிப்போடுங்கள்.
பிறகு சிறிதளவு உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்துப் பத்து நிமிடங்கள் கொதிக்கவிடுங்கள். நன்றாகக் கொதித்த பிறகு ஐஸ் கட்டிகள் சேர்த்து மீண்டும் பத்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு வடிகட்டுங்கள்.
ஒரு பாத்திரத்தில் பாலையும் சர்க்கரையையும் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டி வைத்துள்ள டீ டிகாஷனைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கினால் சுவையான காஷ்மீர் தேநீர் தயார். விருப்பப்பட்டால் தேநீர் மேல் துருவிய பாதாம், பிஸ்தாவை ஒரு டீஸ்பூன் சேர்த்துப் பருகலாம்.