

என்ன தேவை
பீட்ரூட் - கால் கிலோ
கடுகு, சோம்பு - தலா அரை டீஸ்பூன்
வெங்காயம் - 1
தேங்காய் - 2 சில்லு
மிளகாய்த்தூள், மல்லித்தூள் - தலா 1 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு
எப்படிச் செய்வது?
பீட்ரூட்டைத் தோல் சீவி, பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு சேர்த்துத் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். நறுக்கிய பீட்ருட்டைச் சேரத்து, தேவையான தண்ணீர் ஊற்றவும். அதில் மிளகாய்த்துாள், மல்லித்துாள், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவிடவும். தண்ணீர் சுண்டியதும் தேங்காயை அரைத்துச் சேர்த்து இறக்கவும். அருமையான பீட்ரூட் வறுவல் தயார்.