கேழ்வரகு கூழ்

கேழ்வரகு கூழ்
Updated on
1 min read

என்னென்ன தேவை?

கேழ்வரகு மாவு - 4 கப்

அரிசி நொய் - 2 கப்

தயிர் - 3 கப்

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கேழ்வரகு மாவை முதல் நாள் இரவே மூன்று பங்கு தண்ணீர் ஊற்றிக் கரைத்து வைக்கவும். மறுநாள் மாலை ஒரு பெரிய பாத்திரத்தில் ஆறு கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் நொய்யைக் கழுவிப் போடவும். நொய் வெந்ததும் கரைத்து வைத்துள்ள மாவைச் சேர்த்துக் கட்டியில்லாமல் கிளறவும். மாவு வெந்ததும் இறக்கவும். மறுநாள் காலை காய்ச்சிய கூழுடன் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்தால் சுவை அலாதியாக இருக்கும். தண்ணீருக்குப் பதில் மோர் ஊற்றியும் குடிக்கலாம்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in