

என்னென்ன தேவை?
பொட்டுக்கடலை மாவு - 1 கப்
பொடித்த சர்க்கரை - ஒன்றரை கப்
நெய் - 1 கப்
பால் பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி, உலர்ந்த திராட்சை - 10
ஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்
பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை
எப்படிச் செய்வது?
பொட்டுக்கடலையை லேசாக வாணலியில் வறுத்துவிட்டு மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்துக் கொள்ளவும். இவற்றுடன் பால் பவுடர், ஏலக்காய்ப் பொடி, பச்சை கற்பூரம் சேர்த்து கலந்து கொள்ளவும்.
நெய்யில் முந்திரி, திராட்சையைத் தனித்தனியாக வறுத்து, இந்தக் கலவையில் சேர்க்கவும். சூடான நெய்யை இதில் ஊற்றிக் கலந்து உருண்டை பிடிக்கவும். இதைக் கைவசம் வைத்துக்கொண்டால் சுண்டல் செய்யாமல் அல்லது போதாமல் இருக்கும் நாட்களிலும் சரி, திடீர் விருந்தினருக்குத் தாம்பூலம் கொடுக்கவும் சரி மிகவும் உதவியாக இருக்கும்.
குறிப்பு: மீனலோசனி பட்டாபிராமன்