

தேங்காய் - ஒன்றரை மூடி
பாசுமதி அரிசி - ஒரு கப்
முருங்கைக் கீரை - ஒரு கப்
பெல்லாரி வெங்காயம் - 1
முந்திரி - 10
பூண்டுப் பல் - 3
இஞ்சி - சிறு துண்டு
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு, ஏலக்காய் - தலா 3
அன்னாசிப்பூ - 2
பிரிஞ்சி இலை - 1
ஜாதிபத்திரி - சிறிது
பனங்கற்கண்டு - 2 டீஸ்பூன்
நெய் - 50 கிராம்
தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக்கொள்ளுங்கள். முருங்கைக் கீரையில் இரண்டு கப் தண்ணீர், இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து ஒரு கப் அளவுக்கு வரும்வரை கொதிக்கவைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். வெங்காயத்தை நறுக்கித் தேங்காய் எண்ணெய்யில் முறுகலாக வறுத்துக்கொள்ளுங்கள். பாசுமதி அரிசியைக் கழுவி பத்து நிமிடம் ஊறவைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் நெய் விட்டுப் பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஜாதி பத்ரி, அன்னாசிப்பூ, பிரிஞ்சி இலை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து, துருவிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்குங்கள். பிறகு வறுத்த முந்திரி, பாசுமதி அரிசி சேர்த்து சிறிது நேரம் வதக்கி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை அல்லது சம அளவு முருங்கைச் சாறும் தேங்காய்ப் பாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.
இவற்றை குக்கருக்கு மாற்றி பனங்கற்கண்டு, உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடுங்கள். இதைத் தோசைக்கல்லில் பத்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து இறக்குங்கள். வறுத்த வெங்காயத்தைத் தூவிப் பரிமாறுங்கள்.