

என்னென்ன தேவை?
வாழைப்பூ – 1 கப்
அரிசி மாவு – 1 கப்
பொட்டுக்கடலை மாவு – 1 கப்
சோள மாவு – 4 டீஸ்பூன்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 4
இஞ்சி – 1 துண்டு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
நெய் – 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
தயிர் – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
வாழைப்பூவைச் சிறிது நேரம் தயிரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, சோள மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, நெய் ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். பின்னர் அதனுடன் தயிரில் ஊறிய வாழைப்பூவைச் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பிசைந்துவைத்துள்ள மாவை உதிர்த்துப் போட்டுப் பொரித்தெடுங்கள்.