வாழைப்பூ சமையல்: குருமா

வாழைப்பூ சமையல்: குருமா
Updated on
1 min read

என்னென்ன தேவை?

வாழைப்பூ (பொடியாக நறுக்கியது) – 1 கப்

வெங்காயம் – 2

தக்காளி – 1

மிளகாய் வற்றல் – 4

சீரகம் அல்லது சோம்பு – 1 டீஸ்பூன்

பொட்டுக்கடலை – 4 டீஸ்பூன்

பச்சைப் பட்டாணி – 1 கப்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

தனியா – 1 டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – 4 டீஸ்பூன்

எண்ணெய், உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி – சிறிதளவு

கடுகு – 1 டீஸ்பூன்

முந்திரி – 4

கரம் மசாலா – 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

பட்டாணியையும் வாழைப்பூவையும் வேகவைத்து எடுங்கள். மிளகாய் வற்றல், சீரகம், பொட்டுக்கடலை, தனியா, முந்திரி ஆகியவற்றை ஊறவைத்து அவற்றுடன் தேங்காய் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்குங்கள். வேகவைத்த வாழைப்பூவையும் பட்டாணியையும் சேர்த்துக் கிளறுங்கள். அரைத்த விழுதை ஊற்றி, கரம் மசாலா சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். கடுகு தாளித்துக் கொட்டி, கொத்தமல்லி தூவி இறக்குங்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in