

என்னென்ன தேவை?
முற்றிய இரண்டு வாழைக்காய்களின் தோல்
மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
நசுக்கிய பூண்டு – 5
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 5
கடுகு, சீரகம், உளுந்து – தலா 1 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
எப்படிச் செய்வது?
வாழைக்காய்த் தோலைப் பொடியாக நறுக்கி, மஞ்சள் கலந்த தண்ணீரில் போட்டுவையுங்கள். இப்படிச் செய்வதால் தோல் கருக்காமல் இருக்கும். நறுக்கிய தோலுடன் உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வேகவையுங்கள். வெந்ததும் தண்ணீரை வடித்துவிடுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம், பூண்டு ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். பிறகு வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், வாழைக்காய்த் தோல் ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் கிளறுங்கள். பிறகு தேங்காய்த் துருவல், கறிவேப்பிலை இரண்டையும் சேர்த்து இறக்கிவிடுங்கள்.