

என்னென்ன தேவை?
நாட்டுக்கோழிக் கறி – அரை கிலோ
மிளகு - 2 டீஸ்பூன்
வெங்காயம் – 3
மிளகாய்த் தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
தயிர், உப்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு
தாளிக்க:
பட்டை, பிரிஞ்சி இலை, சோம்பு, நெய், கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
எப்படிச் செய்வது?
கோழிக்கறியைச் சுத்தம் செய்து தயிர், உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றைச் சேர்த்து 15 நிமிடம் ஊறவைத்து அலசுங்கள். அதில் சிறிதளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், ஒரு டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து குக்கரில் ஐந்து விசில் விட்டு இறக்குங்கள். மிளகைப் பொடித்துக் கொள்ளுங்கள். வாணலியில் நெய் விட்டு பட்டை, பிரிஞ்சி இலை, சோம்பு, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள்.
பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது இரண்டையும் சேர்த்துச் சிவக்க வதக்குங்கள். வேகவைத்துள்ள கறியைச் சேர்த்து, கறியில் இருக்கும் தண்ணீர் வற்றும்வரை கிளறிக்கொண்டே இருங்கள். பிறகு மிளகுத் தூளைச் சேர்த்து அதோடு கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்துக் கிளறுங்கள். கறியும் மிளகும் ஒன்றாகக் கலந்து வாசனை பரவும்போது மல்லித்தழையைத் தூவி இறக்கிவிடுங்கள்.