

என்னென்ன தேவை?
பப்பாளிக் காய் - கால் கப் (துருவியது)
வெல்லத் துருவல் - கால் கப்
தாளிக்க:
தேங்காய் எண்ணெய், கடுகு, உளுந்து - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 2
எப்படிச் செய்வது?
பப்பாளித் துருவலை ஆவியில் வேகவைத்துக்கொள்ளுங்கள். வெல்லத்தைக் கரைத்து மண் இல்லாமல் வடிகட்டிக்கொள்ளுங்கள். வாணலியில் பப்பாளித் துருவலையும் வெல்லக் கரைசலையும் போட்டுக் கிளறுங்கள். இரண்டும் சேர்ந்து வரும்போது வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்துத் தாளித்து வேகவைத்துள்ள பப்பாளியில் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.