வாழை சமையல்: வாழைக்காய் உருண்டை

வாழை சமையல்: வாழைக்காய் உருண்டை
Updated on
1 min read

என்னென்ன தேவை?

முற்றிய வாழைக்காய் – 1, பொட்டுக்கடலை – கால் கப், பச்சை மிளகாய் – 3, சோம்பு, கசகசா – தலா ஒரு டீஸ்பூன், பட்டை – சிறு துண்டு, கிராம்பு – 3, வெங்காயம் 6 முதல் 8 வரை, தேங்காய்த் துருவல் – 3 டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை, மல்லித்தழை – ஒரு கைப்பிடி, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

தோலுடன் வாழைக்காயை ஆவியில் வேகவைத்துத் துருவிக்கொள்ளுங்கள். பச்சை மிளகாய், பொட்டுக்கடலை, கசகசா, சோம்பு, மல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றைத் தண்ணீர் விடாமல் அரையுங்கள். இந்த விழுதைத் துருவலுடன் சேருங்கள். மற்ற பொருட்களை இதனுடன் சேர்த்துப் பிசைந்து, சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள். இவற்றைச் சூடான எண்ணெய்யில் பதமாகப் பொரித் தெடுங்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in