

என்னென்ன தேவை?
கேழ்வரகு - கால் கப்
சர்க்கரை - 200 கிராம்
நெய் - 100 கிராம்
முந்திரிப் பருப்பு, ஏலக்காய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கேழ்வரகை 4 மணி நேரம் ஊறவைத்து கல் போகக் களையவும். பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். மெல்லிய துணியில் அரைத்த கேழ்வரகை வடிகட்டவும். வடிகட்டும்போது சிறிது நீர் சேர்த்துக்கொள்ளலாம். வடிகட்டிய பாலை 1 மணி நேரம் தெளிய வைக்கவும். மேலாக இருக்கும் நீரைக் கொட்டிவிடவும்.
அடி கனமான பாத்திரத்தில் கேழ்வரகு விழுதை ஊற்றி, அடுப்பில் வைத்துக் கிளறவும். மற்றொரு பாத்திரத்தில் சர்க்கரை, சிறிதளவு நீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். ஒற்றைக் கம்பிப் பாகு பதம் வந்ததும் பாகை வடிகட்டி, கேழ்வரகில் சேர்த்துக் கைவிடாமல் கிளறவும்.
ஏலக்காயைப் பொடித்துச் சேர்க்கவும் அவ்வப்பொழுது நெய்யைச் சிறிது சிறிதாகச் சேர்த்து கலவை கையில் ஒட்டாமல் உருண்டு வரும் போது இறக்கிவிடவும். முந்திரித் துண்டுகளை நெய்யில் வறுத்துச் சேர்க்கவும்.
குறிப்பு: சுபாஷினி வெங்கடேஷ்