

என்னென்ன தேவை?
பிஞ்சு வாழைக்காய் – 2
பெரிய தேங்காய் – 1
பச்சை மிளகாய் – 1
பொட்டுக்கடலைப் பொடி, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வாழைக்காயைத் தோல் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். இதைப் புளித்த மோர் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் போட்டுவைத்தால் கருக்காது. தேங்காயைத் துருவிப் பால் எடுங்கள். இரண்டாம் பாலில் நறுக்கிய பச்சை மிளகாய், அரை டீஸ்பூன் சீரகம், வாழைக்காய்த் துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து வேகவிடுங்கள். வெந்ததும் உப்பு, பொட்டுக்கடலைப் பொடி சேர்த்துக் கொதித் ததும் முதல் பாலை ஊற்றுங்கள். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு எண்ணெய்யில் மீதமுள்ள சீரகத்தையும் கறி வேப்பிலையையும் தாளித்துக் கொட்டுங்கள்.