

என்னென்ன தேவை?
ஆப்பிள் – 3 (புளிப்பில்லாதது)
சர்க்கரை - 200 கிராம்
நெய் - 100 கிராம்
பாதாம், பிஸ்தா - தலா 25 கிராம்
ஏலக்காய்த் தூள், குங்குமப்பூ - சிறிதளவு
எப்படிச் செய்வது?
பாதாம், பிஸ்தாவைத் துருவிக்கொள்ளுங்கள். ஆப்பிளைத் தோல் சீவி, கொட்டை நீக்கித் துருவிக்கொள்ளுங்கள். கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்துச் சர்க்கரையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கம்பிப் பதம் வந்ததும் துருவி வைத்துள்ள ஆப்பிளைச் சேர்த்துக் கிளறுங்கள். கொதி வந்ததும் தீயைக் குறைத்து, நெய்யைச் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருங்கள். வாணலியில் ஒட்டாமல் சுருண்டுவரும்போது குங்குமப்பூவைச் சேர்த்துக் கிளறி இறக்கி, வேறு பாத்திரத்துக்கு மாற்றிக்கொள்ளுங்கள். துருவிய பாதாம், பிஸ்தாவைத் தூவி அலங்கரியுங்கள். ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறுங்கள்.