

என்னென்ன தேவை?
பச்சரிசி – 1 கப்
அவல், தேங்காய் – தலா அரை கப்
வெல்லம் – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
வெண்ணெய் – கால் கப்
பால் – 2 லிட்டர்
பாதாம் – 10
பொடித்த கற்கண்டு – அரை கப்
ஜாதிக்காய்த் தூள், குங்குமப்பூ – தலா 2 சிட்டிகை
எப்படிச் செய்வது?
பச்சரிசி, அவல் இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறியதும் அவற்றுடன் தேங்காய், உப்பு, வெல்லம், ஜாதிக்காய்த் தூள் ஆகியவற்றைச் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த மாவைச் சின்னச் சின்ன தோசைகளாக ஊற்றுங்கள். சுற்றிலும் எண்ணெய் தடவி, இருபுறமும் திருப்பிப்போட்டு வெந்ததும் எடுங்கள்.
பாலை அரை லிட்டராகக் காய்ச்சுங்கள். பாதாமை ஊறவைத்துத் தோலுரித்து அரைத்துப் பாலுடன் சேருங்கள். குங்குமப்பூ, கற்கண்டு இரண்டையும் சேர்த்து, பெரிய தட்டில் ஊற்றுங்கள். ஆறியதும் ஃபிரிட்ஜில் வையுங்கள். நன்றாகக் குளிர்ந்ததும் குட்டித் தோசைகளைச் சேர்த்துப் பரிமாறுங்கள்.