

என்னென்ன தேவை?
துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, மசூர் பருப்பு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு – தலா கால் கப்
வெங்காயம், தக்காளி – தலா 2
பாலக் கீரை, முள்ளங்கிக் கீரை, வெந்தயக் கீரை, கொத்தமல்லி, புதினா (நறுக்கியது) – தலா கால் கப்
பச்சைப் பட்டாணி, கேரட், உருளைக் கிழங்கு, பீன்ஸ், பறங்கிக்காய், முள்ளங்கி, சுரைக்காய் (நறுக்கியது) – தலா கால் கப்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
பிரிஞ்சி இலை – 2
நெய் – கால் கப்
உப்பு – தேவைக்கு
பார்ஸி ஸ்பெஷல் மசாலா – 8 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
பருப்பு வகைகளை ஒன்றாகக் கலந்து அவற்றுடன் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைத்து மசித்துக்கொள்ளுங்கள். கீரை வகைகளையும் காய்கறிகளையும் ஒன்றாக வேகவைத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள்.
அடி கனமான கடாயில் நெய்யை ஊற்றி, பிரிஞ்சி இலை, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். பார்ஸி மசாலாவையும் உப்பையும் சேர்த்துக் கிளறுங்கள். வேகவைத்து மசித்த பருப்பு, பச்சப் பட்டாணி, அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றைச் சேருங்கள். கொதித்துவரும்போது கொத்தமல்லியைத் தூவி அடுப்பை அணையுங்கள். சிவப்பு அரிசிச் சோற்றுடன் இதைச் சாப்பிடுவார்கள்.
பார்ஸி ஸ்பெஷல் மசாலா: தனியா, சீரகம், மிளகாய், ஜாதிக்காய், அன்னாசிப்பூ, மிளகு, சோம்பு, இஞ்சி, பூண்டு, புதினா, பச்சை மிளகாய் ஆகியவை சேர்ந்த கலவை.