

என்னென்ன தேவை?
கம்பு - 1 கப்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கம்பைச் சுத்தம் செய்து மிக்ஸியில் போட்டுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்புப் போட்டுக் கொதிக்கவிடுங்கள். தண்ணீர் நன்றாகக் கொதித்ததும் கம்பு மாவைச் சேர்த்துக் கட்டிதட்டாமல் கிளறுங்கள். நன்றாக வெந்ததும் இறக்கிவைத்துப் பரிமாறுங்கள். உருண்டைகளாகப் பிடித்தும் சாப்பிடலாம். வெந்தயக் குழம்பு அல்லது கறிக்குழம்பு தொட்டுக்கொண்டு சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
- தொகுப்பு: வி.சீனிவாசன்