

என்னென்ன தேவை?
அரிசி மாவு (லேசாக வறுத்தது) – 2 கப்
தேங்காய்ச் சில்லு –
அரை கப்
வேகவைத்த காராமணி – 5 டீஸ்பூன்
கறிவேப்பிலை –
ஒரு கொத்து
பச்சை மிளகாய் – 4
உப்பு – தேவைக்கு
பெருங்காயத் தூள் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து மூன்று கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கொதிக்கவிடுங்கள். அதில் காராமணி, தேங்காய்ச் சில்லு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, அரிசி மாவு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறுங்கள். எண்ணெய்யில் கடுகையும் பெருங்காயத்தையும் போட்டுத் தாளித்து, மாவுக் கலவையில் கொட்டிக் கிளறி ஆறவிடுங்கள். ஆறியதும் பிசைந்து வடைகளாகத் தட்டி நடுவில் துளையிட்டு இட்லித் தட்டில் வைத்து வேகவைத்து எடுங்கள். வெண்ணெய் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.