

மழை, வெயில், பனி என எதுவாக இருந்தாலும் அது அளவுக்கு அதிகமாக மாறும்போது திட்டித் தீர்க்கும் மக்கள், அவற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு உத்திகளையும் வைத்திருக்கிறார்கள். அவற்றில் உணவுக்கு முக்கிய இடம் உண்டு. சுட்டெரிக்கும் கோடையைச் சமாளிக்கும் வகையில் குளிர்ச்சி தரும் உணவு வகைகளைத் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. கோடைக்கு உகந்த உணவு வகைகள் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார் நாமக்கல் மாவட்டம் குறிச்சியைச் சேர்ந்த அம்பிகா.
முளைகட்டிய சாலட்
என்னென்ன தேவை?
பச்சைப் பயறு - ஒரு கப்
கேரட் – ஒன்று
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பச்சைப் பயறை முதல் நாள் இரவே ஊறவையுங்கள். மறுநாள் காலையில் தண்ணீரை வடித்து, பருத்தித் துணியில் கட்டிவைத்தால் நான்கு முளை வந்துவிடும்.
முளைகட்டிய தானியத்தில் கேரட்டைத் துருவி சேருங்கள். அதனுடன் தேவையான அளவு உப்பையும் எலுமிச்சைச் சாற்றையும் கலந்துகொள்ளுங்கள். சத்து நிறைந்த இந்த முளைகட்டிய சாலட், அனைத்து வயதினருக்கும் உகந்தது.
- தொகுப்பு: வி.சீனிவாசன்