

இனிப்பு வகைகளில் ரவை பர்ஃபிக்கு தனி இடம் உண்டு. இதைச் செய்வதும் மிகவும் எளிது. குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதைச் செய்யக் கற்றுத் தருகிறார் தேனி, சௌடீஸ்வரி தெருவைச் சேர்ந்த அபிராமி.
என்னென்ன தேவை?
பொடிரவை - 1 கப்
சர்க்கரை - அரை கப்
நெய் - 4 டீஸ்பூன்
பால் - 4 கப்
ஏலக்காய் - 1 டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு - தேவையான அளவு
கேரட்துருவல் - கால் கப்
எப்படிச் செய்வது?
ரவையை லேசாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பாலை நன்கு கொதிக்க வைத்து ரவையைச் சேர்த்துக் கிளறவும். பின்பு சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து மைசூர்பாகு பதத்தில் கிளறவும். ஏலக்காய் பொடி சேர்த்துக் கிளறி இறக்கவும்.
அதை நெய்தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும். ஆறியதும் வில்லைகள் போடவும். முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து, துண்டுகள் மீது கொட்டவும். பாதாம் பருப்பையும், கேரட் துருவலையும் மேலே தூவி அலங்கரிக்கவும்.