

என்னென்ன தேவை?
பாசிப் பருப்பு – 2 கப்
பச்சரிசி- 1 கப்
இஞ்சி – சிறிது
பச்சை மிளகாய் – 4
கறிவேப்பிலை – ஒரு கொத்து
எண்ணெய், உப்பு – தேவைக்கு
பெருங்காயம் – சிறிது
எப்படிச் செய்வது?
பச்சரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் அரை மணி நேரம் ஊறவைத்து அரைத்துக் கொள்ளுங்கள். இஞ்சித் துண்டு, பச்சை மிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். உப்பு, பெருங்காயத் தூள் சேர்த்துக் கலக்குங்கள். தவா நன்றாகச் சூடேறியதும் மாவைத் தோசைபோல் ஊற்றி இரண்டுபுறங்களிலும் பொன்னிறமாக வேகவிட்டு எடுங்கள்.