

என்னென்ன தேவை?
குதிரைவாலி அரிசி - 3 கப்
துருவிய பனீர் - 1 கப்
முளைகட்டிய பச்சைப் பயறு - அரை கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப்
பச்சை மிளகாய் விழுது - சிறிதளவு
கொத்துமல்லி - 1 கப்,
உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
குதிரைவாலி அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து 3 மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, காய்ந்த துணியில் உலரவைக்கவும். நன்றாக உலர்ந்தவுடன் நைஸாகப் பொடித்து, சலித்துக்கொள்ளவும். சலித்த மாவில் சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டுச் சப்பாத்தி மாவுபோல் கொஞ்சம் எண்ணெய் விட்டுப் பிசைந்துகொள்ளவும்.
துருவிய பனீர், பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் விழுது, கொத்தமல்லி இவற்றுடன் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பிசைந்த மாவைச் சிறு சிறு சப்பாத்திகளாகத் தேய்த்து உள்ளே பனீர், பச்சைப் பயறு கலவையை வைத்து மூடி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.
குறிப்பு: சுபாஷினி வெங்கடேஷ்