

என்னென்ன தேவை?
பாலக் கீரை – 1 கட்டு
பச்சை மிளகாய் -2
உப்பு – தேவைக்கு
கோதுமை மாவு – 1 கப்
ஓமம் – கால் டீஸ்பூன்
சர்க்கரை – கால் டீஸ்பூன்
இஞ்சி – சிறு துண்டு
கரம் மசாலா – 2 டீஸ்பூன்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
பூண்டு – 2 பல்
எப்படிச் செய்வது?
கோதுமை மாவுடன் உப்பையும் ஓமத்தையும் சேர்த்துத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசைந்துகொள்ளுங்கள். இந்த மாவைச் சப்பாத்திபோல் திரட்டிச் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். வாணலியில் இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கொதித்ததும் வெட்டி வைத்துள்ள துண்டுகளைப் போடுங்கள். மாவு வெந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள். பிறகு தண்ணீரை வடித்து, கோதுமைத் துண்டுகளைத் தனியாக எடுத்துவைத்துக்கொள்ளுங்கள்.
பாலக் கீரையைத் தண்ணீரில் போட்டு பத்து நிமிடங்கள் வேகவைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். வடிகட்டிய கீரை, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு, சர்க்கரை, கரம் மசாலா ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த கீரை கலவையை வாணலியில் போட்டு நன்றாகக் கொதிக்கவிடுங்கள். கொதி வந்ததும் கோதுமைத் துண்டுகளைப் போட்டுக் கிளறி அடுப்பை அணைத்துவிடுங்கள். வெண்ணெய் சேர்த்துச் சூடாகப் பரிமாறுங்கள்.