

என்னென்ன தேவை?
கோதுமை மாவு – 1 கப்
கொள்ளு – அரை கப்
வெங்காயம் – 2
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி – சிறிதளவு
இஞ்சி – சிறிய துண்டு
எண்ணெய் – 4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
சீரகத் தூள், தனியாத் தூள் – தலா அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு
எப்படிச் செய்வது?
இரண்டு நாள் முன்பே கொள்ளுப் பயறை ஊறவைத்துக்கொள்ளுங்கள். கொள்ளு நன்றாக ஊறியதும் தண்ணீர் வடித்து முளை வரும்வரை மூடிவையுங்கள். முளைகட்டிய கொள்ளுப் பயறுடன் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி, உப்பு, சீரகத் தூள், தனியாத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த விழுதைப்போட்டு வதக்கிக்கொள்ளுங்கள்.
கோதுமை மாவுடன் உப்பையும் மஞ்சள் தூளையும் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளுங்கள். மாவைச் சிறிதுநேரம் ஊறவைத்துச் சப்பாத்திபோல் திரட்டி அதனுள் அரைத்துவைத்துள்ள கொள்ளுக் கலவையை வைத்து மூடி மீண்டும் திரட்டிக்கொள்ளுங்கள். சப்பாத்தியைச் சூடான தவாவில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபக்கமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுங்கள்.