

என்னென்ன தேவை?
கேழ்வரகு மாவு – ஒன்றரை கப்
வெண்ணெய் – கால் டீஸ்பூன்
சமையல் சோடாவும் பேக்கிங் பவுடரும் கலந்த கலவை – சிறிதளவு
பேரிச்சம் பழம் – கால் கப்
பால் – அரை கப்
பொடித்த சர்க்கரை – கால் கப்
தேங்காய்த் துருவல் – 1 டீஸ்பூன்
சமையல் எண்ணெய் – கால் கப்
எப்படிச் செய்வது?
கேழ்வரகு மாவு, சமையல் சோடா, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சலித்துக்கொள்ளுங்கள். பேரீச்சம் பழத்தை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளுங்கள். அகலமான பாத்திரத்தில் பால், அரைத்த பேரீச்சம் பழம், பொடித்த சர்க்கரை, சமையல் எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளுங்கள். இத்துடன் சலித்து வைத்துள்ள மாவைச் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் வெண்ணெய் தடவி, கலந்துவைத்துள்ள மாவைக் கொட்டுங்கள்.
குக்கரில் தண்ணீர் ஊற்றிச் சூடானதும் கேழ்வரகுக் கலவை வைத்துள்ள பாத்திரத்தைக் குக்கரினுள் வையுங்கள். குக்கரை மூடி போட்டுப் பத்து நிமிடங்கள் வேகவிடுங்கள். விசில் போடக் கூடாது. பத்து நிமிடங்கள் கழித்து கேக் வெந்துவிட்டதா எனப் பார்த்த பிறகு கேக் பாத்திரத்தை வெளியே எடுங்கள். அதை வேறொரு தட்டில் தலைகீழாகக் கவிழ்த்து தேங்காய்த் துருவலைத் தூவிப் பரிமாறுங்கள்.