

(ரெட் கறி செய்ய) என்னென்ன தேவை?
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
காஷ்மீரி சில்லி - 6
இஞ்சி - 1 சிறிய துண்டு
பூண்டுப் பற்கள் – 4
பெரிய வெங்காயம் - 2
உப்பு – தேவையான அளவு.
காய்கறி கலவைக்கு:
கேரட் – 1
நறுக்கிய பச்சை குடைமிளகாய், மஞ்சள் குடைமிளகாய் - 1 கப்
பேபி கார்ன் – 2
கெட்டியான தேங்காய்ப் பால் - 1 கப்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய மல்லித்தழை – 4 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
வெறும் வாணலியில் தனியா, சீரகம் இரண்டையும் வறுத்துக்கொள்ளுங்கள். காஷ்மீரி சில்லியை அரை மணி நேரம் ஊறவைத்து அதனுடன் வறுத்த தனியா, சீரகம், இஞ்சி, பூண்டு, வெங்காயம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கெட்டியாக அரையுங்கள்.
கேரட், பேபி கார்ன் இரண்டையும் மெலிதாக அரிந்து அரை வேக்காடாக வேகவைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு அரைத்த விழுதைச் சேர்த்து வதக்குங்கள். வேகவைத்த கேரட்டையும் பேபிகார்னையும் சேர்த்து வதக்குங்கள். இரண்டு வண்ணக் குடைமிளகாய்களையும் சேர்த்து வதக்குங்கள். இப்போது உப்பு, தேங்காய்ப் பால் சேர்த்து இரண்டு கொதி வந்ததும் மல்லித்தழையைத் தூவி இறக்கிவிடுங்கள். இதைச் சோற்றில் பிசைந்து சாப்பிடலாம்.