பழைய காய், புது உணவு: முள்ளங்கிப் பால் கூட்டு

பழைய காய், புது உணவு: முள்ளங்கிப் பால் கூட்டு
Updated on
1 min read

என்னென்ன தேவை?

முள்ளங்கி - 3

பால் -1 டம்ளர்

தேங்காய்ப் பால் – கால் டம்ளர்

நெய், உப்பு – தேவையான அளவு

அரைக்க:

பச்சை மிளகாய் - 3

கசகசா – கால் டீஸ்பூன்

சீரகம் – அரை டீஸ்பூன்

முந்திரிப் பருப்பு - 6

தேங்காய்த் துருவல் - 3 டீஸ்பூன்

தாளிக்க: கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, மல்லித் தழை - சிறிதளவு

எப்படிச் செய்வது?

முள்ளங்கியைத் தோல் சீவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள். முள்ளங்கியைத் தண்ணீர் சேர்த்த பாலில் உப்பு சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள். அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக்கொள்ளுங்கள். வாணலியில் நெய் சேர்த்து, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளியுங்கள். வேகவைத்துள்ள முள்ளங்கியைச் சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடுங்கள். உப்பு சரிபார்த்துக் கெட்டியானதும் இறக்கி, தேங்காய்ப் பால் சேர்த்துப் பரிமாறுங்கள். பொதுவாக முள்ளங்கியை எப்படிச் சமைத்தாலும் அதன் வாடை சிலருக்குப் பிடிக்காது. இந்தப் பால் கூட்டில் முள்ளங்கி வாடை இருக்காது. சப்பாத்தி, நாண் போன்றவற்றுக்குத் தொட்டுக்கொள்ளலாம். பேலியோ டயட்டில் உள்ளவர்கள் பன்னீர் ரோஸ்டுக்கு இதைத் தொட்டுச் சாப்பிடலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in