கிஸ்மிஸ் பழத்தொக்கு

கிஸ்மிஸ் பழத்தொக்கு
Updated on
1 min read

என்னென்ன தேவை?

பிஞ்சு கத்தரிக்காய் - கால் கிலோ

பட்டை - சிறு துண்டு

வெங்காயம் - 5

லவங்கம் - 2

மிளகு - 2 டீஸ்பூன்

மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்

கிஸ்மிஸ் பழம், புளி - தலா 50 கிராம்

நல்லெண்ணெய் - 100 மி.லி.

எப்படிச் செய்வது?

பிஞ்சுக் கத்தரிக்காயைக் காம்பு மட்டும் நீக்கவும். ‘தோகை’ என்று சொல்லப்படும் பச்சைநிறப் பகுதியுடன் சேர்த்து நான்காகக் கீறிக்கொள்ளவும். கத்தரிக்காய் துண்டாகி விடக்கூடாது.

வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், மிளகு போட்டுத் தாளிக்கவும். நறுக்கிய கத்தரிக்காய்களைச் சேர்த்து வதக்கி, மூடவும்.

காய்கள் எண்ணெயிலேயே வேக வேண்டும். முக்கால் அளவு வெந்ததும் கிஸ்மிஸ் பழங்களைச் சேர்த்து, சிம்மில் வைக்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து மிளகாய்த்தூள், கெட்டியாகக் கரைத்த புளி சேர்த்து வேகவிடவும்.

எண்ணெய் பிரிந்து, மிளகாய்த் தூளுடன் சேர்ந்து மேலே வந்ததும் இறக்கி வைக்கவும். இனிப்புச்சுவை வேண்டுபவர்கள் 2 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

புலாவ், வெஜிடபிள் பிரியாணி, பொங்கல் ஆகியவற்றுக்கு ஏற்ற இணை இது. ஒரு மாதம் வரை கெடாது. கத்தரிக்காய் தீர்ந்ததும் மீதமுள்ள தொக்கை சாதத்தில் பிசைந்தும், ரொட்டி, தோசை, இட்லி ஆகியவற்றுடனும் சாப்பிடலாம்.

குறிப்பு: மும்தாஜ் பேகம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in