

என்னென்ன தேவை?
மைதா மாவு – 1 கப்
இனிப்புச் சோளம் – 1 கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – 4 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
இனிப்புச் சோளத்துடன் சிறிதளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த விழுதுடன் மிளகாய்த் தூள், மைதா மாவு, வெண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசைந்துகொள்ளுங்கள். கலவையை வட்டமாகத் தேய்த்து முக்கோண வடிவில் வெட்டி, எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள்.
சல்சா செய்யத் தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 1
தக்காளிச் சாறு – 3 டேபிள் ஸ்பூன்
சில்லி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
Basil இலைகள் - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி இரண்டையும் தக்காளிச் சாறு ஊற்றி வதக்குங்கள். அதனுடன் உப்பு, மிளகுத் தூள், பேசில் இலைகள், சில்லி சாஸ் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்குங்கள். பொரித்துவைத்த நேக்கோஸை இந்த சல்சாவில் தொட்டுச் சுவைக்கலாம்.
செம்ம ருசி: மணமணக்கும் மட்டன் ஈரல் வறுவல்