

என்னென்ன தேவை?
சோள மாவு – அரை கப்
கரைத்த வெல்லம் – அரை கப்
ஏலக்காய்ப் பொடி – ஒரு சிட்டிகை
தேங்காய்ப் பால் – 2 கப்
நெய்யில் பொரித்த தேங்காய்ப் பல் – 2 டேபிள் ஸ்பூன்
பொடித்த சர்க்கரை – 1 டீஸ்பூன்
உப்பு – சிட்டிகை
எப்படிச் செய்வது?
சோள மாவு, உப்பு, பொடித்த சர்க்கரை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து சிறிது நீர்விட்டுப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டுங்கள். அவற்றை ஆவியில் பத்து நிமிடம் வேகவைத்து எடுங்கள். உருண்டைகள் சூடு ஆறியதும் கரைத்த வெல்லத்தில் போட்டு ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்குங்கள். வெல்லம் ஆறியதும் தேங்காய்ப் பால், ஏலக்காய்ப் பொடி, பொரித்த தேங்காய்ப் பல் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.