கம்பரிசி மசாலா இட்லி

கம்பரிசி மசாலா இட்லி
Updated on
1 min read

என்னென்ன தேவை?

கம்பு - 3 கப்

உளுந்து - 1 கப்

தக்காளி - 3

சின்ன வெங்காயம் - 15

மல்லிப் பொடி - 2 டீஸ்பூன்

சீரகப் பொடி - அரை டீஸ்பூன்

மிளகாய்ப் பொடி - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 2 டீஸ்பூன்

நெய் - 1 டீஸ்பூன்

கிராம்பு , பட்டை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

எப்படிச் செய்வது?

கம்பு, உளுந்து இரண்டையும் நன்றாகக் கழுவி 3 மணி நேரம் தனித் தனியாக ஊறவைக்கவும். பிறகு இட்லி மாவுக்கு அரைப்பதுபோல் அரைத்து உப்பு போட்டு 6 முதல் 8 மணி நேரம் வரை புளிக்க வைக்கவும். புளித்த மாவை இட்லித்தட்டில் ஊற்றி, ஆவியில் வேகவைக்கவும். வெந்த இட்லிகளைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

தக்காளியைக் கொதிக்கும் நீரில் போட்டு தோல் உரித்து அரைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய், நெய் ஊற்றி காய்ந்தவுடன் கிராம்பு, பட்டை சேர்த்துத் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். அனைத்து பொடிகளையும் போட்டு வதக்கி, தக்காளி சாறு சேர்த்துக் கிளறவும். தேவையான உப்பு, நறுக்கிய இட்லி துண்டுகளைச் சேர்த்துப் பிரட்டவும். அருமையான சுவையில் இருக்கும் இந்தக் கம்பரிசி மசாலா இட்லியை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.

குறிப்பு: சுபாஷினி வெங்கடேஷ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in