

என்னென்ன தேவை?
கத்தரிக்காய் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 100 கிராம்
கடுகு, உளுந்து - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
தேங்காய்த் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
எப்படிச் செய்வது?
கத்தரிக்காய்களைச் சிறு சிறு துண்டுகளாக்கவும். அவற்றுடன் சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து குழையாமல் ஆவிகட்டி வேகவைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
பச்சை மிளகாய், வெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு வேகவைத்த கத்தரித் துண்டுகளைச் சேர்த்து, உடையாமல் கிளறவும். ஐந்து நிமிடங்கள் கழித்து தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும். எளிதாகச் செய்யக்கூடிய பொரியல் இது. ரசம் சாதம், வற்றல் குழம்புக்கு ஏற்ற தொடுகறி இது.
இதைத் தயிர் பச்சடியாகவும் செய்யலாம். இதனுடன் கெட்டித் தயிர் கலந்தும் சாப்பிடலாம்.
குறிப்பு: மும்தாஜ் பேகம்