

என்னென்ன தேவை?
பச்சரிசி – 1 ஆழாக்கு
ஜவ்வரிசி – 2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
பூசணித் துண்டுகள் – 1 கப்
உப்பு – தேவைக்கு
எண்ணெய் – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
அரிசி, ஜவ்வரிசி இரண்டையும் கழுவி, இரண்டு மணி நேரம் ஊறவையுங்கள். பச்சை மிளகாய், பூசணித் துண்டுகள், உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரையுங்கள். அதனுடன் ஊறிய அரிசியைப் போட்டு நைசாக அரையுங்கள். அரைத்த மாவை அடி கனமான பாத்திரத்திலோ நான் ஸ்டிக் தவாவிலோ எண்ணெய்விட்டு அடிபிடிக்காமல் நன்றாகக் கிளறி எடுத்துக்கொள்ளுங்கள். சூடு ஆறியதும் மாவை அச்சில் போட்டு வெள்ளைத் துணியிலோ மூங்கில் தட்டிலோ பரவலாகப் பிழியுங்கள். அச்சு இல்லாதவர்கள் சிறு உருண்டைகளாகக் கிள்ளிவைத்துக் காயவைக்கலாம். வற்றலை வெயிலில் நன்றாகக் காயவைத்துத் தேவையானபோது எண்ணெய்யில் போட்டுப் பொரித்துச் சாப்பிடலாம்.