

என்னென்ன தேவை?
பீட்ரூட் – 2
கடலை மாவு – 2 கப்
அரிசி மாவு – அரை கப்
ஓமம் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிப்பதற்குத் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பீட்ரூட்டைத் தோல்சீவி நறுக்கி வேகவிட்டு, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, ஓமம் ஆகியவற்றை நன்றாக கலந்துகொள்ளுங்கள். அதனுடன் அரைத்து வைத்துள்ள பீட்ரூட் விழுதைச் சேர்த்து முறுக்குப் பதத்திற்குப் பிசைந்துவைத்துக்கொள்ளுங்கள். பிறகு ஓமப்பொடி அச்சில் மாவைப் போட்டுச் சூடான எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சத்தான பீட்ரூட் சேவை தயார். இதைக் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.