

என்னென்ன தேவை?
ஆட்டு ஈரல் - கால் கிலோ
எண்ணெய் - 2 டீஸ்பூன்
பட்டை – சிறு துண்டு
கிராம்பு - 1
வெங்காயம் - 1
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - அரை டீஸ்பூன்
சீரகத் தூள் - அரை டீஸ்பூன்
தனியாத் தூள் - ஒரு டீஸ்பூன்
மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சட்டியில் எண்ணெய் ஊற்றிப் பட்டை, கிராம்பு போட்டுத் தாளியுங்கள். வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து வதக்குங்கள். மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், சீரகத் தூள், தனியாத் தூள் சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள். இதனுடன் ஆட்டு ஈரல், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி, சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவிடுங்கள். தண்ணீர் வற்றியவுடன் மிளகுத் தூள் சேர்த்துக் கிளறி இறக்குங்கள்.