Published : 04 Nov 2018 15:41 pm

Updated : 25 Dec 2018 15:41 pm

 

Published : 04 Nov 2018 03:41 PM
Last Updated : 25 Dec 2018 03:41 PM

தெருவெல்லாம் மணக்கும் தீபாவளி விருந்து - ஜாங்கிரி

என்னென்ன தேவை?

உளுந்து – 1 கப்

சர்க்கரை – ஒன்றரை கப்

அரிசி மாவு - 2 டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்

உப்பு - சிறிதளவு

ஃபுட் கலர் - சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

உளுந்தை அலசி இரண்டு மணி நேரம் ஊறவைத்து இட்லி மாவைவிடக் கொஞ்சம் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். அதில் உப்பு, ஃபுட் கலர், அரிசி மாவு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறிக்கொள்ளுங்கள். சர்க்கரையில் அரை கப் தண்ணீர் ஊற்றி, கம்பிப் பதம் வரும் வரை காய்ச்சி இறக்குங்கள். அதில் எலுமிச்சைச் சாற்றைச் சேருங்கள்.

தடிமனான பாலித்தீன் பை அல்லது பால் கவரின் ஒரு முனையில் சிறு ஓட்டையைப் போட்டு அதில் மாவை நிரப்பி, எண்ணெய்யில் விரும்பிய வடிவத்தில் பிழிந்து இருபுறமும் வேகவையுங்கள். வெந்ததும் அவற்றைச் சர்க்கரைப் பாகில் போட்டு நன்றாக அழுத்தி 2 நிமிடம் கழித்து எடுத்தால் சுவையான மினி ஜாங்கிரி தயார்.

தலைவாழைசமையல் குறிப்புசமையல் டிப்ஸ்தீபாவளி சமையல்தீபாவளி விருந்துதீபாவளி பலகாரம்விசேஷ பலகாரம்பலகாரம் செய்வது எப்படிவிசேஷ உணவுஜாங்கிரி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author