

தாமரைப்பூ போல அழகான நிறம் கூடிய இந்தத் துவையலைச் செய்வது எளிது, சுவையும் புதிது.
என்னென்ன தேவை?
தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்
பீட்ரூட் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ஆர்க்கு
எப்படிச் செய்வது?
பீட்ரூட்டைத் தோல் நீக்கிவிட்டு, துருவிக் கொள்ளவும். அதோடு தேங்காய்த் துருவல், புளி, உப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து அரைக்கவும். அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். பீட்ரூட் துருவலை ஆவியில் வேகவைத்தும் சேர்க்கலாம். பீட்ரூட் துருவலை அதிகப்படுத்திக் கொண்டால் பட்டுரோஜா போல அழகான நிறத்தில் இருக்கும். விரதம் இல்லாத நாட்களில் வதக்கிய வெங்காயம் சேர்த்து அரைக்கலாம்.
குறிப்பு: மீனலோசனி பட்டாபிராமன்