

என்னென்ன தேவை?
பெரிய வெள்ளரிக்காய் – ஒன்று
மாங்காய் – 1
பெரிய நெல்லிக்காய் – 1
பச்சை வேர்க்கடலை - இரண்டு டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
மல்லித் தழை (பொடியாக நறுக்கியது) – 3 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய தக்காளி - இரண்டு டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
வெள்ளரி, மாங்காயைத் தோல் சீவிக்கொள்ளுங்கள். சதைப் பகுதியை ரிப்பன் மாதிரி மெலிதாகவும் நீளமாகவும் சீவிக்கொள்ளுங்கள். தேங்காய்த் துருவல், நெல்லிக் காய் (விதை நீக்கி அரிந்தது) உப்பு, மிளகாய், மல்லி, இஞ்சித் துருவல், வேர்க்கடலை ஆகியவற்றுடன் சிறிது நீர் விட்டு மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
முதலில் வெள்ளரியை வைத்து அதன் மீது நீளமாக சீவிய மாங்காயை வையுங்கள். இவற்றின் மீது அரைத்த விழுது சிறிது பரப்பி அதன் மீது தக்காளித் துண்டுகளைப் பரப்பி, பாய் சுருட்டுவது மாதிரி சுருட்டுங்கள். நடுவில் பிரியாமல் இருக்க டூத் பிக் குத்திச் சாப்பிடலாம். புளிப்பும் காரமும் சேர்ந்து சாப்பிட அருமையாக இருக்கும்.