

என்னென்ன தேவை?
பிடி கருணைக் கிழங்கு - 250 கிராம்
புளி - பெரிய எலுமிச்சை அளவு
பச்சை மிளகாய் - 6
சாம்பார் வெங்காயம் - 50 கிராம்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, வெல்லம் - சிறிதளவு
எப்படிச் செய்வது?
கருணைக் கிழங்கை அவித்துத் தோல் உரித்து மசித்து வைத்துக்கொள்ள வேண்டும். வெங்காயத்தைப் பொடியாக அரிந்துகொள்ள வேண்டும். மிளகாயையும் பொடியாக வெட்டிக்கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை, சிறிது பெருங்காயத் தூள் போட்டுத் தாளிக்க வேண்டும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கி, சிறிது புளித் தண்ணீரை ஊற்றி வேகவிடுங்கள். பின் மசித்த கிழங்கைப் போட்டு சிறிது நேரம் கழித்து வெல்லம் போட்டுக் கிளறி இறக்க வேண்டும். சாம்பார் சாதத்துடன் தொட்டுச் சாப்பிடச் சுவையாக இருக்கும்.