தெருவெல்லாம் மணக்கும் தீபாவளி விருந்து - கறிக் குழம்பு

தெருவெல்லாம் மணக்கும் தீபாவளி விருந்து - கறிக் குழம்பு
Updated on
1 min read

என்னென்ன தேவை?

ஆட்டுக் கறி – அரை கிலோ

சின்ன வெங்காயம் - 20 (நறுக்கியது)

தக்காளி - 2 (நறுக்கியது)

உருளைக் கிழங்கு - 1 (நறுக்கியது)

பெரிய கத்தரிக்காய் - 1 (நறுக்கியது)

பச்சை மிளகாய் - 2 (கீறியது)

தேங்காய் – கால் மூடி

முந்திரி - 6

இஞ்சி - பூண்டு விழுது – இரண்டரை டீஸ்பூன்

மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு

வறுத்து அரைக்க:

மிளகாய் - 12

மல்லி - 2 டீஸ்பூன்

மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

தாளிக்க:

பட்டை, கிராம்பு, சோம்பு,

பிரிஞ்சி இலை, கடல் பாசி,

அன்னாசிப் பூ,

நல்லெண்ணெய்,

கறிவேப்பிலை, மல்லித்தழை.

எப்படிச் செய்வது?

கறியில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தயிரில் 15 நிமிடம் ஊறவையுங்கள். பிறகு அலசி அரை டீஸ்பூன் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து (தண்ணீர் சேர்க்கக் கூடாது) குக்கரில் ஐந்து விசில் விட்டு இறக்குங்கள். வாணலியில் எண்ணெய் விட்டுத் தாளிக்கக் கொடுத்தவற்றைப் போட்டுத் தாளித்து, வெங்காயம் சேர்த்து சிவக்க வதக்குங்கள். பின் இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.

பின் தக்காளி சேர்த்து, அது கரையும்வரை வதக்கி, நறுக்கி வைத்துள்ள உருளை, கத்தரியைச் சேர்த்து வதக்குங்கள். பின் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்துப் பச்சை வாசனை போகும்வரை வதக்குங்கள். பின் வேகவைத்துள்ள கறியைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு சரிபார்த்துக் கொதிக்கவிடுங்கள். குழம்பு கொதித்தவுடன் அரைத்துவைத்துள்ள தேங்காய் விழுதைச் சேருங்கள். கொதிவந்தவுடன் மல்லித்தழையைத் தூவி இறக்குங்கள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in