சௌசௌ பலகாரம்: துவையல்

சௌசௌ பலகாரம்: துவையல்
Updated on
1 min read

என்னென்ன தேவை?

சௌசௌ – 1

காய்ந்த மிளகாய் – 4

உளுந்து, கடலைப்

பருப்பு – தலா 1 டீஸ்பூன்

தேங்காய்த் துருவல் – அரை கப்

சின்ன வெங்காயம் – 5

பூண்டு – 2 பல்

உப்பு, எண்ணெய் – தேவைக்கு

புளி – சிறிதளவு

எப்படிச் செய்வது?

சௌசௌவைத் தோலுடன் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் உளுந்து, கடலைப் பருப்பு, சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், நறுக்கி வைத்துள்ள சௌசௌ ஆகியவற்றைத் தனித்தனியாக வதக்கி எடுத்துவைத்துக்கொள்ளுங்கள். சூடு ஆறியதும் அவற்றுடன் உப்பு, புளி, தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்தெடுங்கள்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in