

என்னென்ன தேவை?
சௌசௌ – 1
உருளைக் கிழங்கு – 3
வெள்ளை அவல் – 1 கப்
வெங்காயம் – 2
மல்லித் தூள், கரம் மசாலா – தலா 1 டீஸ்பூன்
ரஸ்க் அல்லது ரொட்டித் தூள் – 2 கப்
கொத்தமல்லித் தழை – அரை கப்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
சோள மாவு அல்லது கடலை மாவு – 1 கப்
எப்படிச் செய்வது?
சௌசௌ, உருளைக் கிழங்கு இரண்டையும் குக்கரில் போட்டுக் குழைய வேகவிட்டு எடுத்துக்கொள்ளுங்கள். அவலை ஒரு நிமிடம் ஊறவைத்துத் தண்ணீரை வடித்துவைத்துக்கொள்ளுங்கள். மசித்த உருளை, சௌசௌ, அவல், நறுக்கிய வெங்காயம், மல்லித் தழை, மிளகாய்த் தூள், கரம் மசாலா, சோள மாவு, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள்.
இதை வடைகளைப் போல் தட்டி ரஸ்க் தூளில் புரட்டி எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள். எண்ணெய்யில் பொரிக்க விரும்பாதவர்கள், தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு மொறுமொறு பதத்தில் எடுக்கலாம்.