

என்னென்ன தேவை?
சௌசௌ – 1
வெங்காயம் – 2
இஞ்சி – சிறு துண்டு
சோள மாவு – 1 கப்
பொட்டுக்கடலை மாவு – 1 கப்
மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
நெய் – 2 டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
சௌசௌவைத் தோல் நீக்கித் துருவுங்கள். ஒரு பாத்திரத்தில் சோள மாவு, பொட்டுக்கடலை மாவு, மிளகாய்த் தூள், உப்பு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, வெங்காயம், நெய், துருவிய சௌசௌ ஆகியவற்றைப் போட்டு நன்றாகப் பிசைந்துகொள்ளுங்கள். வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிச் சூடானதும் பிசைந்துவைத்த கலவையைப் பக்கோடாக்களாக உதிர்த்துப் போட்டுப் பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள்.