

என்னென்ன தேவை?
மாதுளை முத்துக்கள் உதிர்த்தது - ஒரு கப்
சாக்லேட் சிரப்/சாஸ் – 3 டேபிள் ஸ்பூன்
பாதாம் (வறுத்துப் பொடித்தது) - இரண்டு டேபிள் ஸ்பூன்
எப்படிச் செய்வது?
சாக்லேட் சிரப்புடன் பாதாம் தூளைக் கலந்துகொள்ளுங்கள். பாலித்தீன் பையில் மருதாணி கோன் மாதிரி செய்து அதில் இந்த சிரப்பை ஊற்றிக்கொள்ளுங்கள். அல்லது சிறிய துளை உள்ள சாஸ் பாட்டிலிலும் ஊற்றிக்கொள்ளலாம். ஒரு தட்டில் சாக்லேட் சிரப்பை கோன் வழியாகக் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி மரம் போல் வரைந்துகொள்ளுங்கள். ஆங்காங்கே மாதுளை முத்துக்களை வைத்து இலை போல அலங்கரியுங்கள். கண்ணைக் கவரும் மாதுளை செடி/மரம் தயார்.