

என்னென்ன தேவை?
புரோக்கோலி - 200 கிராம்
கேரட் - 2
உருளைக் கிழங்கு - 2
சோள மாவு - 50 கிராம்
ரஸ்க் தூள் - 150 கிராம்
இஞ்சி - பூண்டு விழுது – சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
எப்படிச் செய்வது?
புரோக்கோலி, கேரட், உருளைக் கிழங்கு ஆகியவற்றை வேகவைத்து ஆறவையுங்கள். அவற்றுடன் மிளகாய்த் தூள், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக மசித்துக்கொள்ள வேண்டும். பின்பு உருண்டையாகப் பிடித்து கரைத்து வைத்துள்ள சோள மாவில் முக்கியெடுத்து உள்ளங்கையில் வைத்துத் தட்டி, ரஸ்க் தூளில் புரட்டியெடுத்து வட்டமாகத் தட்டுங்கள். அவற்றை எண்ணெய்யில் போட்டுப் பொரித்தெடுங்கள்.