நித்தம் நித்தம் சத்துணவு! - நுங்கு பொடிமாஸ்

நித்தம் நித்தம் சத்துணவு! - நுங்கு பொடிமாஸ்
Updated on
1 min read

என்னென்ன தேவை?

கெட்டியான நுங்கு - 5

பச்சை மிளகாய் - 3

தேங்காய்த் துருவல் – 1 கப்

கறிவேப்பிலை, சீரகம், உப்பு, தேங்காய் எண்ணெய் - சிறிதளவு

எப்படிச் செய்வது?

நுங்கைத் தோல் நீக்கிவிட்டு, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பச்சை மிளகாய், தேங்காய்த் துருவல், சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து  அரைத்துக்கொள்ள வேண்டும். அதில் தேவையான அளவு உப்பு  சேர்த்து, நறுக்கி வைத்துள்ள நுங்கு துண்டுகளுடன் பிரட்டி வைக்க வேண்டும். கால் மணிநேரம் கழித்து, வாணலியில் தேங்காய் எண்ணெய் சிறிது ஊற்றி, மிதமான சூட்டில் எண்ணெய் காய்ந்தவுடன் நுங்கு பிரட்டலைப் போட்டுப் பச்சை வாசம் போகும்வரை பிரட்டி எடுக்க வேண்டும். சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுக்குத் தொட்டுக்கொள்ளச் சுவையாக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in