குழந்தைகளும் சமைக்கலாம்: பிரெட் ரோல்

குழந்தைகளும் சமைக்கலாம்: பிரெட் ரோல்
Updated on
1 min read

என்னென்ன தேவை?

பிரெட் துண்டுகள் – 6

மாம்பழக் கூழ் - அரை கப்

தக்காளிச் சாறு – அரை கப்

சீஸ் துண்டுகள் – 6

சர்க்கரை - நான்கு டீஸ்பூன்

வெண்ணெய் - 50 கிராம்

எப்படிச் செய்வது?

மாம்பழக் கூழில் பாதி  சர்க்கரை, பாதி வெண்ணெய் சேர்த்து அடித்துக்கொள்ளுங்கள். மீதி உள்ள வெண்ணெய், சர்க்கரையைத் தக்காளிச் சாறுடன் சேர்த்து அடித்துக் கொள்ளுங்கள். ஒரு பிரெட் துண்டை எடுத்து லேசாக நீர் தெளித்து, சப்பாத்திக் குழவியால் அழுத்தி உருட்டினால் சற்று நீளமாகும். அப்போதுதான் சுருட்ட வரும். அதில் சீஸ் வைத்து அதன் மீது  சர்க்கரை மாம்பழக் கூழ் சிறிது வைத்துச் சுருட்டுங்கள். முனைகளை அழுத்திவிட்டால் பிரியாது. அதே மாதிரி மற்றொரு பிரெட் துண்டில்  சீஸ் வைத்து சர்க்கரை கலந்த தக்காளி பியூரி தடவி இதே முறையில் சுருட்டுங்கள். எல்லா பிரெட் துண்டுகளையும் இதே மாதிரி செய்து சாப்பிடலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in